வெள்ளத்தடுப்பு நடவடிக்கை – தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை..!
சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி, நீர் வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.