முல்லைப் பெரியாறு அணை நிரம்பி வருவதால், கேரளாவில் வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணை நிரம்பி வருவதால் கேரளாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 142 அடியை எட்டியதையடுத்து கேரள அரசு, வெள்ள அபாயஎச்சரிக்கை விடுத்துள்ளது.
காலை 7 மணிக்கு பதிவான 141.95 அடியில் இருந்து 10 மணிக்கு 142 அடியாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 750 கனஅடி நீரை வெளியேற்றி வருவதால் அப்புகுதிக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 127 ஆண்டுகால முல்லைப்பெரியாறு அணை, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்துவருகிறது.