சென்னையில் கனமழை.! விமான சேவைகள் கடும் பாதிப்பு.!

கனமழை: சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் நேற்று நள்ளிரவு தலைநகர் சென்னையில் உட்பகுதி மற்றும் புறநகர் என பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மழைநீர் தேங்கும் நிலை உருவானது. வெவ்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன.
நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக இன்று துபாய், டெல்லி, புனே செல்லும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. கனமழை காரணமாக விமானங்கள் தாமதமாக செல்லும் நிலை உருவானது.
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லி பகுதியில் 10.4 செமீ அளவுக்கு மழை பெய்தது எனவும், சோழிங்கநல்லூர் பகுதியில் 8.2 செமீ மழை பெய்தது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025