சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை – விமான சேவை ரத்து!

ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Chennai - International Airport

சென்னை : ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதிகனமழையும், சூறைக்காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, நிர்வாக காரணங்களால் 9 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஆனால்திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரூ, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழை பெய்யும் அளவை பொருத்தும், காற்றின் வேகத்தை பொருத்தும் விமான சேவைகளில் மாற்றம் இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்