லட்சத்தீவுக்கு விமான சேவை.! சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு.!

Chennai Airport - Ayodhya - Lakshadweep Islands

சென்னை விமான நிலைய நிர்வாகம் இன்று இரண்டு முக்கிய வழித்தடங்கள் வழியாக செல்லும் விமான சேவை அறிவிப்பை வெளியிட்டுளளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அயோத்தி மற்றும் லட்சத்தீவில் உள்ள அகாட்டி ஆகிய இடங்களுக்கு விமான சேவை செயல்படும்  சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த விமான சேவையானது அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது.

மாலத்தீவு விவகாரம்.. பெரிய திட்டத்துடன் லட்சத்தீவில் களமிறங்கிய டாடா.!

அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், அண்மையில் தான் அயோத்தியில் புதியதாக விமான நிலையமும் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் திறப்பு விழா மட்டுமின்றி, அதற்கடுத்தும் ராமர் கோயிலை காண பக்தர்கள், சுற்றுலாவாசிகள் வர எதுவாக விமான சேவை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல, மாலத்தீவு விவகாரத்தில், அந்நாட்டிற்கு செல்ல சுற்றுலாவாசிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு, தற்போது லட்சத்தீவு பக்கம் சுற்றுவாசிகள் கவனத்தை திருப்பியுள்ளது. அதனால், லட்சத்தீவில் சுற்றுலா குறித்த புதிய முதலீடுகளை செய்ய பல்வேறு பெரிய தொழிலதிபர்கள் முடிவு செய்து அதனை செயல்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு, லட்சத்தீவு மற்றும் அயோத்திக்கு சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்