விமானம் தாமதம்..! இறந்த சகோதரன் முகத்தை பார்க்க முடியலேயே என அழுத பெண்..!
சென்னையிலிருந்து மும்பை செல்லும் கோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன் தினம் காலை 5 மணிக்கு புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 213 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைத்து பயணிகளும் நாலு மணிக்குள் விமான நிலையத்திற்கு வந்தனர்.
ஆனால் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால் அதை சரி செய்து காலை 7 மணிக்கு மும்பைக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் கூறியபடி7மணிக்கு விமானம் புறப்படவில்லை .இதனால் பயணிகள் மீண்டும் விமான அதிகாரிகளிடம் கேட்ட போது கண்டிப்பாக 10 மணிக்கு புறப்படும் என அறிவித்தனர்.
இதற்கு பயணிகள் 10 மணிக்கு விமானம் இயந்திர கோளாறை சரி செய்து புறப்படவில்லை என்றால் எங்கள் டிக்கெட்டை ரத்து செய்து விடுகிறார்கள். வேற விமானத்தில் செல்லுகிறோம்என கூறினர். விமான ஊழியர்கள் கண்டிப்பாக புறப்பட்டுவிடும்என தெரிவித்தனர்.
ஆனால் விமானம் மதியம் 1.30 மணி வரை புறப்படவில்லை இதனால் விமானத்தில் இருந்த குழந்தைகள் , பெரியவர்கள் பசியால் வாடினர். விமானத்தின் சட்டப்படி பறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்தில் பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் உட்கார கூடாது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் தாம்பரத்தை சேர்ந்த ஒரு பெண் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். விமான 8 மணி நேரமாக புறப்படாததால் மிகவும் கவலை அடைந்து அழுதுள்ளார். அவரிடம் சக பயணிகள் விசாரித்த போது மும்பையில் தனது சகோதரன் காலமாகிவிட்டார்.
இறுதி சடங்கில் கலந்துகொள்ள இந்த விமானத்தில் ஏறினேன். பல மணி நேரம் ஆகியும் விமானம் புறப்படவில்லை எனது சகோதரன் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியாமல் இவர்கள் செய்து விட்டார்களே என கதறி அழுதார். இதைக் கேட்ட சக பயணிகள் கண் கலங்கினார். பின்னர் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டது.