சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,பொதுக்குழுவுக்கு போலி அடையாள அட்டையுடன் பலர் வந்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனைத் தொடர்ந்து,ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,2665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு போலி அடையாள அட்டையுடன் வருபவர்களை தடுக்க QR தொழில்நுட்பத்திலான அடையாள அட்டைகள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்கு முதல் நாள் இரவு தரப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து,பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கட்டாயம் QR Code அடையாள அட்டையுடன் வருகை புரிய வேண்டும் எனவும்,QR Code பரிசோதித்த பிறகே பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,இதன்மூலம் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆன்லைனில் பதிவு செய்யமுடியும் என்பதால் ஈபிஎஸ் தரப்பு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…