விருதுநகர் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.! 150 பேர் சிக்கி தவிப்பு.!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அய்யனார் கோவில் காட்டாட்ற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எனும் ஊரில் அய்யனார் கோவில் காட்டாட்ற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.