அண்ணாமலை வீட்டின் முன் வைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம் – 2 பேர் கைது..!
சென்னையை அடுத்த பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேவையற்ற மோதல் போக்கு உருவாகும் என இஸ்லாமிய மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய நடத்திய போராட்டம் காரணமாக பாஜகவினர் கொடி கம்பத்தை போலீசார் கழற்றி போலீஸாரால் கழற்றி அகற்றப்பட்டது. அப்போது பாஜகவினர் மற்றும் காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த தள்ளுமுள்ளு காரணமாக, கோடி கம்பத்தை அகற்றுவதற்காக நின்ற கிரேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற போது கிரேன் கண்ணாடி அடித்து உடைத்த பாஜகவின் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.