இன்று வேளாங்கண்ணியில் கொடியேற்றம்! பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு போலீசார் குவிப்பு!
வேளாங்கண்ணியில் பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு போலீசார் குவிப்பு.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்திற்கு அனைத்து மதத்தினரும் எந்த வேறுபாடும் இன்றி சென்று வருவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.
இந்த ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில், பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லைகளில் 21 சோதனை சாவடிகள் அமைத்து 1,100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.