நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கைது
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில் பனவடலி சத்திரம் அருகே காரில் வந்த 5 பேரை போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே தீவிர விசாரணை நடத்திய போது கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். 18 இடங்களில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்ட அவர்களிடம் இருந்து 90 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், மற்றும் 7 லட்சம் ரொக்கம் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐந்து பேரும் சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.