திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை..! போலீஸ் தொடர் விசாரணை.!
- விஜயரகு திருச்சி காந்தி சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் வழக்கும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
- முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சார்ந்த லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு ,முகமது ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக துணை தலைவர் விஜயரகு என்பவரை இன்று அதிகாலை 6 மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர். விஜயரகு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தார்.
விஜயரகுவை கொலை செய்தததாக கூறி லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.விஜயரகு திருச்சி காந்தி சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் வழக்கும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இவரை ஏற்கனவே இரண்டு முறை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சார்ந்த லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு ,முகமது ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறி இருவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன் தான் ஜாமீனில் வியாபாரி மிட்டாய் பாபு வெளிவந்த நிலையில் தனது கூட்டணிகளுடன் இந்த கொலை சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் காந்தி சந்தையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக துணை தலைவரை கொலை செய்த சம்பவம் பாஜக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள விஜயரகு உடலை காண தொண்டர்களும் ,சில முக்கிய தலைவர்களும் வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
20 வருடங்களுக்கு முன் பாஜக மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் ஸ்ரீதார் படுகொலை செய்யப்பட்டார்.தற்போது மீண்டும் ஒரு பாஜக பிரமுகர் கொலை செய்த சம்பவம் பாஜக வட்டாரத்திலும் , திருச்சியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.