7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை-அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில்,ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள் தான் .கெத்து, வச்சு செய்வேன் போன்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளது.
இளைஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அதனை பயன்படுத்துகிறார்கள். உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மொழியை தவிர மற்ற 5 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை.எனவே இணைய தகவல் தொடர்பில் தமிழ் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ்மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் .
மேலும் உலகம் வல்லரசாக மாற 2 கருவிகள் மிக முக்கியமானது என்றும், அதில் பொருளாதார வளர்ச்சி, ராணுவ படை ஒரு கருவி என்றாலும், மொழி என்பது ஒரு முக்கியமான கருவி என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.