கடலூரில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தில் சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதன் பிறகு நடைபெறும் உடல்தகுதி தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான இந்த உடற்தகுதி தேர்வானது கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் 3,794 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,045 பேர் பெண்கள், 2,748 பேர் ஆண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
இந்த பணிகள் அனைத்தும் கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேஷன் தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் என இந்த தேர்வை நடத்துகின்றனர். முதலில் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது, அதனை தொடர்ந்து உயரம், மார்பளவு, தொடர்ச்சியாக 7 நிமிட ஓட்டம் ஆகியவை நடத்தப்படுகிறது. பலத்த பாதுகாப்போடு உடற்தகுதி தேர்வின் முதற்கட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…
சென்னை : திரைப்பட தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்ரேலியா அணியை…