மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை, ரூ.5000-ல் இருந்து ரூ.8000 ஆக உயர்வு.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

FishingSuspensionRelief

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 3,400 லிட்டரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து, “மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும். மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

மேலும், “விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும். மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்” எனவும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்