சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போரட்டம் நடத்தி வருவது குறித்து சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேச்சு.
சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதன்பின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஓபிஎஸ், மீனவர்கள் தொழில் செய்ய மெரினா லூப் சாலையை பயன்படுத்துவத்தற்கு வழிவகை செய்ய வேண்டும்.
கவன ஈர்ப்பு தீர்மானம்:
மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார். இதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், மீனவ மக்களுக்கு மீன்பிடி தொழிலை தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை என்றும் மீனவர்களை சொந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கூடாது எனவும் வேல்முருகன் கூறினார்.
வாழ்வாதாரம் உறுதி:
மேலும் கடற்கரை ஓரத்தில் மீனவர்கள் குடியிருக்கின்றனர் என ஜிகே மணி கூற, மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என ஜவாஹருதுல்லா தெரிவித்ததை தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மான மீது பேசி வருகின்றனர். அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
ஐகோர்ட் உத்தரவு:
ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறிய அளவிலான நடவடிக்கை இது. மீனவர்கள் தொடர்பான பிரச்சனை இன்று காலையொடு முடிவுக்கு வந்துவிட்டது என பேரவையில் தெரிவித்தார். இதனிடையே, மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…