மீனவர்கள் விவகாரம் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் மிகுந்த வேதனையும், மன வருத்தமும் அடைந்துள்ளேன். தொடர் கைது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடுமையான சமூக பொருளாதார விளைவை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருமபி கொடுக்கவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு
1/2 pic.twitter.com/7PnXyA8aNI— TN DIPR (@TNDIPRNEWS) July 25, 2023