தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது . தற்போது 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு ஒன்று மத்திய அரசு அறிவித்தது. அதில் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60 நாட்களுக்கும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 -ம் தேதி வரையிலான 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மீன்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31-ஆம் தேதி வரை உள்ள 47நாள்களுக்கு, மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31-ம் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் விசைப்படகுகளுக்கு, 61 நாளிலிருந்து 47 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம்.
மேற்கு கடற்கரைப் பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…