மீனவர்களே கடலுக்கு செல்ல தயாரா? நாளையுடன் முடிவடைகிறது மீன்பிடி தடை காலம்!

சென்னை : தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், ஆண்டுதோறும், ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14 -ம் தேதி வரை மேற்கு கடற்பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீள்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. தற்பொழுது, கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாட்களுக்குப் பின் நாளையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுதும் நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதனால், 2 மாதங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு விற்கப்பட்டு வரும் மீன்களின் விலை இனிமேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025