மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் மாலை இரவில் மழை பெய்யும் என்றும், மாலத்தீவு, மன்னார்வளைகுடா, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.