மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்…! வானிலை மையம் எச்சரிக்கை
மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். தரைக்காற்று பலமாக வீசும் தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.45 முதல் 55 கி.மீ. வரை தரைக்காற்று பலமாக வீச வாய்ப்பு உள்ளது . சென்னையில் தரைக்காற்று பலமாக வீச வாய்ப்பு உள்ளது .2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் சென்னைக்கு அருகே 690 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நிலைக்கொண்டுள்ளது.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து, ஆந்திர கடலோர பகுதிகளான ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே 17-ம் தேதி கரையை கடக்கும்.மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.