“அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்”- சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்..!

Published by
Surya

அடுத்த 24 மணி நேரத்தில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார்.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தளவில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறினார்.

மேலும், கடல் பகுதியில் காற்று மணிக்கு 45 கி.மீ. – 55 கி.மீ. வரை வீசக்கூடும். இதன்காரணமாக, மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

Published by
Surya

Recent Posts

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

”இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…

1 hour ago

அடுத்த போட்டியில் இதை பன்னாதீங்க! ஆர்சிபிக்கு அட்வைஸ் கொடுத்த கேன் வில்லியம்சன்!

பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…

2 hours ago

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா – தவெக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்.?

சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…

2 hours ago

இனிமே இவ்வளவு வரி கொடுக்கணும்! டோனால்ட் டிரம்ப் அதிரடி…யாருக்கு அதிகமான வரி?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…

2 hours ago

வரியை தூக்கி போட்ட டிரம்ப்.! இந்தியா என்ன போகிறது.? சாதகமா..? பாதகமா..?

டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…

3 hours ago

வர்த்தகப் போரை தொடங்கிவிட்ட டிரம்ப்! பதிலடி கொடுக்க உலக நாடுகள் திட்டம்?

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…

4 hours ago