மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் கடல் வளத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மீனவர்கள் 2-வது நாளான நேற்று திருமுல்லைவாசல் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில், ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டார். அப்போது மீனவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மீண்டும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து போராட்டத்தை இரவு வரை தொடர்ந்தனர்.
நேற்று இரவு பூம்புகாரில் திருமுல்லைவாசல், மடவா மேடு, சந்திரபாடி பகுதி மீனவர் பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இன்று 3-வது நாள் போராட்டத்தை மீனவர்கள் தொடர்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் நடைபயணமாக சீர்காழி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…