உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்கள் தொடர்ந்து கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் கடல் அரிப்பினைத் தடுக்க நேர்கல்சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைத்து தர இப்பகுதி மீனவர்கள் கோரியதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2020-21 நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராமத்தில் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.
தற்போது, தமிழக அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளது. இந்நிலையில், இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டதால் பகுப்பட்டியம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராம பகுதியில் கடல் அரிப்பு தடுக்கப்படுவதோடு மீனவர்கள் தங்களது படுகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…