கடல் அரிப்பை தடுத்து மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்

உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்கள் தொடர்ந்து கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் கடல் அரிப்பினைத் தடுக்க நேர்கல்சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைத்து தர இப்பகுதி மீனவர்கள் கோரியதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2020-21 நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராமத்தில் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.
தற்போது, தமிழக அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளது. இந்நிலையில், இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டதால் பகுப்பட்டியம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராம பகுதியில் கடல் அரிப்பு தடுக்கப்படுவதோடு மீனவர்கள் தங்களது படுகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் அமைத்தல் தொடர்பான பத்திரிக்கை செய்தி.. pic.twitter.com/YcfbPX7t80
— DJayakumar (@offiofDJ) October 11, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025