தமிழக மீனவர்கள் விவகாரம்: இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட சட்ட விதிகளில் இடமில்லை- மத்திய அரசு
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட சட்ட விதிகளில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் தொடர்ந்த வழக்கில் வெளியுறவுத்துறை இலங்கைக்கான துணைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க கடந்த 34 ஆண்டுகளாக மத்திய அரசு தவறிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.