ஆரம்பித்தது மீன்பிடித் தடைக்காலம்…!!! 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை…!!!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 ஆம் தேதி வரையிலான 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக அறியப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலமானது, 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள தடைக்காலத்தால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதியில்லை. எட்டாயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனிடையே, மீன்வளத்துறை ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், மீன்பிடித் தடைக்காலம் இரண்டு மாதங்கள் அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு லட்சத்து 60 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு 82 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்தத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்