சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் ஏப்.14 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடல்.!
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் இட நெருக்கடி காரணமாக மேதினப்பூங்கா அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அங்கு கழிவுநீர் செல்வதற்கு வசதிகள் செய்யாமல் இருந்ததால் அங்கு சுகாதாரம் இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தக்க அறிவுரைகளை வழங்கினார்கள். மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர்.
இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வருவதால் நெருக்கடியை தவிர்ப்பதற்காக நாளையும் (வெள்ளி), ஞாயிற்றுக்கிழமையும் மீன் மார்க்கெட் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட் ஏப்.14 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது போதிய அளவு மீன்கள் இல்லாததால் ஆந்திராவில் இருந்து மீன், இறால் வருவதாக வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில், மீன் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்படுகிறது என அறிவித்துள்ளனர்.