உரத் தொழிற்சாலையின் கழிவு…!! நீரால் மீன்கள் இறந்து கரையொதுங்கிய பரிதாபம்…!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவளத்தில் ஏராளமான மீன்கள் செத்து கரையொதுங்கின. பவளப்பாறைகளுக்கு இடையே குஞ்சு பொறிக்கும் மூஞ்சான், ஊளி, ஓரா வகை மீன்கள் கடற்கரையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இறந்து கிடந்தன.
கடற்கரையை ஒட்டியுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் கழிவு நீரே மீன்கள் இறப்புக்கு காரணம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 டன்னுக்கும் அதிக மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் இறந்த மீன்களையும், கடல்நீரையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்