முதல் மனைவி புகார் : விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்த நபர் கைது !
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குமார்.இவர் எலெக்ட்ரிக் கடை வைத்துள்ளார். இவருக்கும் சாரதி என்பவருக்கும் கடந்த 14 வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது.
திருமணமான அடுத்த ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார்.
உறவினர்கள் பேசியும் சராதி சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் குமார் யாருக்கும் தெரியாமல் கடந்த 3 வருடங்களுக்கு முன் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த 2 மாத ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த செய்தி அறிந்த சாரதி நானும் அவருக்கு பிறந்த 13 வயது பெண்குழந்தை உயிருடன் இருக்கும்போது முறையாக விவாகரத்து பண்ணாமல் எப்படி திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து தனது கணவர் மீதும் அவரின் குடும்பத்தின் மீதும் திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் சாரதி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பெயரில் நேற்று மதியம் 2 மணிக்கு மகளிர் போலீசார் அவரது வீட்டில் அவரை கைது செய்தனர்.மேலும் அவ்ரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.