முதன் முறையாக வெளியான மாவட்டவாரியான கொரோனா பரிசோதனை விவரங்கள்.!

இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்டவாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்கள் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.இன்று மட்டுமே 1500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இதுவரையில், கொரோனா தொற்று கண்டறிய செய்யப்படும் சோதனை மாதிரிகளின் எண்ணிக்கையானது தமிழகம் முழுவதும் மொத்த எண்ணிக்கையாகவே கூறப்பட்டு வந்தது.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்டவாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.