ஆண்டின் முதல் உரை…!திமுக வெளிநடப்பு …! முக்கிய பிரச்சனைகளை பேச சபாநாயகர் அனுமதி இல்லை …!ஸ்டாலின்
தமிழக அரசு கேட்ட கஜா புயல் முழு நிவாரண தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த ஆண்டுக்கான முதல் தொடர் என்ற போதிலும், ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது, முக்கிய பிரச்சனைகளை பேச சபாநாயகர் அனுமதி தராததால் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம். தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை ஆளுநர் சபையில் வாசித்து கொண்டிருக்கிறார்.தமிழக அரசு கேட்ட கஜா புயல் முழு நிவாரண தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.