கொடைக்கானலை சுற்றிப்பார்க்க நாளை முதல் அனுமதி – மாவட்ட ஆட்சியர்!
கொடைக்கானலை சுற்றிப் பார்க்க நாளை முதல் அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் நிலை அறிந்து தமிழக அரசு தற்போது சில தளர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சாலைகள் ஆகியவை இயங்க துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாத் தலங்களும் தற்பொழுது கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலை சுற்றிப் பார்ப்பதற்கு நாளை முதல் அனுமதி அளித்து அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் அறிவித்துள்ளார். வெளி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளை இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும், உள் மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம் எனவும் கூறியுள்ளார்.