இலங்கை மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த 2 படகுகளை விடுவிக்க கோரி இலங்கை கடற்படைக்கு திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யபவடுவதும் வழக்காமான ஒன்றாகவே மாறிப்போனது. இரு நாட்டு அளவிலும் அதற்க்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.
இலங்கை கடற்படையால் நாகையை சேர்ந்த சுப்ரமணி மற்றும் காரைக்காலை சேர்ந்த செல்வராஜ் ஆகியோரது படகுகள் சிறைபடிக்கப்பட்டு இலங்கை கடற்படை கட்டுப்பாட்டில் இருந்தன.
இதனை மீட்டுத்தரகோரி படகு உரிமையாளர்கள் திரிகோணமலை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த படகுகளை விடுவிக்க கோரி இலங்கை கடற்படைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக படகு விடுவிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…