“முதல்வரே…இதனை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Published by
Edison

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய நீர்வள ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

“முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.இதனை தனது 07-05-2014  தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

ஆனால்,உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு செயல்படுவதன் காரணமாக அணுகு சாலையை சரி செய்யவோ அல்லது அங்குள்ள மரங்களை வெட்டவோ முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.  இதற்கிடையில்,முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பது நியாயமற்றது.எனினும்,மத்திய நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கடமையும்,பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு.

எனவே,தமிழக முதல்வர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை வலுப்படுத்தும் வகையில் மரங்களை வெட்ட அனுமதி வழங்குமாறு கேரள அரசிற்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.தமிழக அரசின் சார்பில் திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும்.இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய நீர்வள ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

22 minutes ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

1 hour ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

1 hour ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

1 hour ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

2 hours ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

4 hours ago