ஆண்டின் முதல் சட்டப்பேரவை – திமுக ,காங்கிரஸ் வெளிநடப்பு
- சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது.
- ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.
ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலைக்கு ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை.தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை.தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.