தூத்துக்குடியில் நாளை முதல் விமான சேவை.!
தூத்துக்குடியில் நாளை முதல் விமான சேவை தொடங்கும் என விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.
இந்நிலையில், இன்று முதல் விமானப் போக்குவரத்து தொடங்கியது. தமிழகத்தில், கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுவரை தமிழகத்தில், 16,277 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், சென்னை விமான நிலையத்தில் வெளியிலிருந்து வரும் 25 விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்கள் வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற விமானநிலையங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என நேற்று தமிழக அறிவித்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் நாளை முதல் விமான சேவைதொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பிற்பகல் 1.20 மணிக்கும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பகல் 12.35 மணிக்கு விமான சேவை தொடங்கும் என விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.