போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாதது ஏன் ? கனிமொழி கேள்வி
போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாதது ஏன் ? கனிமொழி கேள்வி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின் இரங்கலை #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்? எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது. 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 27, 2020