திண்டுக்கல்லில் இருவர் மீது துப்பாக்கி சூடு..!
நிலத்தகராறில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே, தென்மலையில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ராஜ் கண்ணு மற்றும் கருப்பையா இருவர் படுகாயம் அடைந்தனர். நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் நிலையில், படுகாயம் அடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.