இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது – டாக்.ராமதாஸ்
காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை.
நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீண்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது!
காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய – மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.
5. காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய – மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்! @PMOIndia @CMOTamilnadu
— Dr S RAMADOSS (@drramadoss) October 21, 2022