பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் இயங்கி வந்த ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று 30 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துகொண்டு இருந்தபோது பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
இந்த வெடி விபத்து சம்பவத்தில் 5 பேர் பலியாகிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பேர் 4 படுகாயங்களுடன் சிப்பிப்பாறை மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.