விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்ப்பட்ட அறைகள் உள்ளன. அதில், இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் தங்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது, மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் இன்று 70-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பட்டாசு கடை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரை தொடர்ந்து, உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…
சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில்…