ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்ட பட்டாசு வெடித்தத்தில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுதான் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலவகையான பட்டாசுகளை வெடித்து இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உண்டு.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், தனது இருசக்கர வாகனத்தின் முன் புறமாக மூட்டைகளில் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு தனது 7 வயது மகனை உடன் அழைத்துச் கொண்டு புதுவை நோக்கி சென்றுள்ளார். தமிழக எல்லைப் பகுதியான சின்ன பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, அந்த நாட்டு பட்டாசு திடீரென்று வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் கணேசன் மற்றும் அவரது மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…