தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை தீபாவளிக்கு காலை 1 மணி நேரமும், மாலை 1 மணிநேரமும் நிபந்தனையுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையெடுத்து, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு தயாரிப்பின்போது விதிமுறைகள் மீறுவதால் அப்பாவிகள் உயிரிழக்க நேரிடுகிறது. பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பதால் பலர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் ஒரு சிலர் பலருடைய ஆரோக்கியமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…