புலிகள் காப்பக பகுதியில் பட்டாசு வெடிக்க தடை – வனத்துறை
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட வனத்துறை தடை விதித்துள்ளது. பட்டாசு சத்தத்தால் வனவிலங்குகள் அச்சமடையும் என்பதால் தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.