தமிழகஅரசு, துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து கண்காணித்தால் மட்டுமே பட்டாசு விபத்துகளை தடுக்க முடியும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக சார்பில் ஏற்கனவே பலமுறை அறிக்கை அளித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறியதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.
இனிவரும் காலங்களில் பட்டாக விபத்துகளை தடுக்க, உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், தமிழக அரசு துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து பட்டாலிஆலைகளை கண்காணிக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…