பட்டாசு விபத்து: உயிரிழந்த 14 பேரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

தமிழக, கர்நாடக எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 உயிரிழந்தனர். தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது.
பின்னர், தீ மளமளவென பரவியதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமாகியது. நேற்று முதல் மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், இன்று காலை இந்த தீ விபத்தில் 14 உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த பட்டாசு கடையில் 20 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீவிபத்தில் பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வெடி விபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த 7 பேரிடம் புகார் பெறப்பட்டு கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.