பட்டாசு வெடித்து விபத்து – பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு!
மோகனுர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு.
நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார் மற்றும் மூதாட்டி பெரியக்காள் (73) ஆகிய 2 பேர் உயிரிழந்திருந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தில்லைக்ககுமாரின் தாயார் உடலும் இடிபாடுகளுக்குள் இருந்து தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தில்லைக்ககுமாரின் தாயார் செல்வி, மனைவி பிரியாவின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
ஓட்டப்பாளையத்தில் கிடங்கில் பதுக்கல் செய்யப்பட்டுள்ளது, கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் தில்லை யார் ஒர்க் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார் தில்லைக்குமார். புத்தாண்டை முன்னிட்டு விற்பனை செய்ய அதிக அளவில் பட்டாசுக்களை கிடங்கில் சேமித்து வைத்துள்ளார் தில்லைக்குமார். பட்டாசு விபத்தை தொடர்ந்து சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் ஆய்வு மேற்கொண்டார்.