உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – பிரேம் ஆனந்த் சின்ஹா

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வேடிக்கை அனுமதி அளிக்கப்படும் என சுற்றுசூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள், தீபாவளி பண்டிகை அன்று 15000 காவல்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அநாகரிகமாக பேசி வருகிறார் – வானதி சீனிவாசன்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
பொதுமக்கள் தீபாவளியை பாதுகாப்பான முறையில் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். அதேநேரத்தில் மக்கள் உத்தரவுகளை சரியான முரையில் கையாள வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025