பாஜகவிற்கு எதிராக திமுக பற்ற வைத்த நெருப்பு இந்தியா முழுதும் விரைவில் எரியும்- திமுக எம்.பி ஆ.ராசா
சிவசேனா கட்சி தற்போது தான் விழித்திருக்கிறது, விரைவில் திமுக பற்றவைத்த நெருப்பு இந்தியா முழுதும் பற்றி எரியும் என எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் சட்டத்தை சிதைத்துக்கொண்டிருப்பதாக பாஜக ஆட்சியின் மீது குற்றம் சாட்டிய திமுக நீலகிரி எம்.பி ஆன ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவை எதிர்ப்பதற்கான வலுவான குரல் தமிழ்நாட்டை தவிர மற்ற பகுதிகளில் இல்லை என்றிருந்தோம், ஆனால் தற்போது சிவசேனா கட்சியினர் விழித்துக்கொண்டனர்.
இதற்கான பாசிச சக்திக்கு எதிரான, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு விரைவில் இந்தியா முழுதும் பற்றி எரியும், 2024 பாராளுமன்ற தேர்தலில் இதன் தீர்வு தெரியவரும் என்று கூறியுள்ளார்.